"சோஷியல் சமுத்திரக்கனி To சோஷியல் மீடியா சமுத்திரக்கனி"

கொண்டாடத்தில் சேராத உறவு, தருணம், நேரம், நினைவுகள்னு பல விஷயங்கள ரீவைண்ட பண்ணி பார்க்க வைச்சிருக்கு 'கொரோனா'. ஒருபக்கம் விழிப்புணர்வு, பாசிட்டிவ் கேஸ், போலீஸ் அடினு சீரியஸா இருக்க.. இன்னொரு பக்கம் தாயம், பாம்பு கட்டை, டிக்டாக், சீரியல் (ஸ்), ராமாயணம், மகாபாரதம்னு சிறப்பா போயிட்டு இருக்கு.. அதிலும் மகிழ்மதியே உயிர்கொள்ங்க்ற ரேஞ்ச்ல வாட்சப் குரூப்லாம்  பரபரப்பா இயங்கிட்டு இருக்கு.. போலீசுக்கு பயந்து பால்வாங்க கூட வெளிய போக முடியாத இந்த நேரத்தில ஆல் ஏரியாவையும் மாறு வேஷத்துல சுத்தி வந்துட்டு இருக்காரு நம்ம 'சாட்டை' சமுத்திரக்கனி சார். பேஸ்புக், டுவிட்டர், ஷேர்சட்னு அந்த மனுசன் உலா வராத இடமே இல்ல. சும்மா இருந்த நேரத்திலயே தூங்கிட்டு இருந்த நேசமணிய வேர்ல்டு பேமஸ் ஆக்குனாங்க., பீல்டு அவுட் ஆனா கரண சொர்ர்னும், தில்வாலே புச்சுலேகாலானு அப்பாஸலாம் ட்ரெண்ட் அடிச்சு துவைச்ச மாதிரி, இப்ப பீீீீீக்ல இருக்காரு சமுத்திரக்கனிி அண்ணன். அதுவும் பாரபட்சம் பார்க்காம மனுசன பாடா படுத்துறாய்ங்க. டேய் யார்டா நீங்கலாம்னு அவரோட வாய்ஸலயே அவர பாத்து பரிதாப பட்றாங்க... இதோடு நிக்காம மலர் டிச்சர பாடம் எடுக்க விடாம உட்காரு பல்லவி, படு பல்லவி, ஓடு பல்லவினு கமெண்ட அடிச்சு குச்சியாட்டம் இருக்கற அந்த புள்ளய எறும்பாட்டம் ஆக்கிட்டு இருக்காங்க., கொரோனாவுக்கு மருந்து அதுல இருக்கு இதுல  இருக்குனு வாட்சப்லயே வாக்கிங் வர்ற அந்த நாலு பேரு கோஷ்டி ஒரு பக்கம்னா.. பஞ்சமுகி அனுஷ்காவ பிளாஷ்பேக் சொல்லி வரவழைச்ச மாதிரி போதி தர்மர கூப்டு வாங்கனு ஸ்ருதிக்கு 'சுருதி' ஏத்திட்டு இருக்காங்க நெட்டிசன்ஸ் கோஷ்டி... நா செவெனேன்னு தானடா இருந்தனு போதி தர்மர்ல ஆரம்பிச்சு சமுத்திரக்கனி, சாய் பல்லவினு பட்டியல் நீளுது இன்னும் என்னலாம் பண்ண காத்திருக்காங்கலோ...!
                             - கடிதாசி தொடரும்...

Comments