'கொரோனா' என்னும் கொடிய அரக்கன்!

உலகம் முழுவதும் ஒற்றை வார்த்தையை உச்சரிக்க வைத்து கொண்டு இருக்கிறது ஒரு உயிரி. சீனாவின் உகான் நகர மீன் சந்தையில் இருந்து பரவி இருக்கிறது என நம்ப படுகிறது இந்த கொரோனா வைரஸ். இது ஏதோ புதுவிதமான நோய் அல்ல ஏற்கனவே பரீட்சையமான பல நாடுகளுக்கு ஆட்டம் காட்டிய சார்ஸ் வைரசின் வெர்சன் 2.0 தான் (Sars-2ncov) இது. தொடக்கத்தில் சாதாரண சளியுடன் கூடிய காய்ச்சல் என்று சிகிச்சை பெற்ற பலர் சீனாவில் மளமளவென செத்து மடிய அவர்களின் ரத்த மாதிரியை மருத்துவர்கள் சோதனை செய்ததில் சார்ஸ் வைரசில் இருந்த அத்தனை பண்புகளுடனும் ஒத்துப்போய் ஷாக் கொடுத்தது கொரோனா. தகவலறிந்த சுகாதாரத்துறைக்கு நிலைமையின் தீவிரத்தை புரிந்து நெருக்கடி நிலையை அமல்படுத்தியது. ஆனால் அதற்குள் கைமீறி விட்ட சூழ்நிலையில்தான் உகான் நகர மக்கள் ஆஸ்பத்திரிகளில் குவிய தொடங்கினர். வைரசின் தாக்கத்தை தாமதமாக புரிந்துகொண்ட சீனா, ஆயிரக்கணக்கானோர் வசித்த நகரத்தை ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தி, நோய் பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டது. இது மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவக்கூடியது என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க 10 நாட்களில் மருத்துவமனை, 2,500 மருத்துவர்கள் என முழு மூச்சாக இறங்கியது சீனா. ஆரம்பத்தில் பொருட்டாக நினைக்காத (WHO) பின்னர் உலக சுகாதார நெருக்கடி என அறிவித்தது. இதை கண்டு உஷாரான பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டது. ஆனால் அதிலும் காட்டிய அலட்சியத்தால் சீனாவை காட்டிலும் வேகமாகவே கரை சேர்ந்து அண்டை நாடுகளான, தென்கொரியா , ஈரான், இத்தாலி என 165 நாடுகளுக்கு வேட்டு வைத்து உள்ளது . இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கொரோனா ஈரானில் பத்து நிமிடத்திற்கு ஒரு உயிர்ப்பலி என தன் கோர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் அசுரவேகத்துடன் பரவிவருவதால் நாட்டில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பரவலை தடுக்க பள்ளி, கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள், அரசு , தனியார் நிறுவனங்கள் மூடபபட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு , கூட்டமாக கூட தடை என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் இன்னமும் பெரிதாக கருதாமல் அலட்சியப்படுத்தியே வருகிறோம். இது மேலும் சிக்கலையே உண்டாக்கும். இந்தியா இப்போது 2-ம் நிலையில்தான் இருக்கிறது. அதாவது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு என்ற படியி்ல் இருக்கிறது. இதற்கு அடுத்ததுதான் அபாயகரமான நிலை வெளிநாடு, மாநிலங்களுக்கு செல்லாதவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதுதான் சமுதாய பரவல் (Social Transmission) 3-ம் நிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலைமை ஏற்படாமல் இருக்கதான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்  பெருவாரியான மக்கள் குறிப்பாக 2-ம் , 3-ம் நிலை நகரங்கள், கிராமப்புறங்களில் என்ன நடக்கிறது என்றே விசயம் புரியாமல் விழிபிதுங்கி இருக்கின்றனர். வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள் இருமும்போதும் , தும்மும்போதும் வெளிபடும் நீர்த்திவலைகள் படியும் இடங்களில்  3 நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதன் பாதிப்பு உள்ளவர்களுக்கு சாதாரண சளி, இருமல் காய்ச்சலே இருப்பதாக தெரியும். 4-5 நாட்களுக்கு மேல் வீரியமடைந்த பிறகு மூச்சுத்திணறல், சுவாச கோளாறு என உச்சநிலையை அடைந்து நோய்வாய்ப்பட்டவர்கள எனில் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோய் பாதிப்பினால் பலி எண்ணிக்கை சொற்ப அளவில்தான் என்றாலும் சீனியர் சிட்டிசன்களுக்கே சிம்மசொப்பனமா இருந்து வருகிறது. இதுவரையில் கொரோனாவால் இறந்தவர்களில் அதிகமானோர் 65-வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். அதுதவிர சிறுவர்கள், கர்ப்பிணி பெண்களையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், சிகரெட், மது பழக்கம் உள்ளவர்களை எளிதில் தாக்கும்.

வைரஸ் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள:

சுய சுத்தம், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல், வெளியில் செல்ல நேரிட்டால் மாஸ்க். இருமல் சளி , காய்ச்சல் இருந்தால் உங்களையே தனிமைப்படுத்துறது உங்கள் சுத்தி இருக்கிறவங்களுக்கு நல்லது. சிகரெட் பழக்கத்தை தவிர்த்திருங்க (or) சிகரெட் பிடிக்கறவங்கட்ட இருந்து விலகி இருங்க. அநாவசியமா கூட்டத்த கூட்டாம கட்டதுரைக்கு கட்டம் சரியில்லடானு சங்கத்தை கலைச்சிருங்க.. வாட்ஸ் அப்ல வருதுனு இஞ்சிய காய்ச்சி காதுல ஊத்துறது, சன் பாத் பண்றனு  பாடிய புண்ணாக்கிக்க வேண்டாம் மக்களே...!  வீட்டுலயே குடும்பத்தோட இருங்க பாதுகாப்பா இருப்பீங்க...!
                                  - கடிதாசி தொடரும்

Comments