"அய்யப்பனும் - கோஷியும்" தமிழ் வெர்சன்
இப்படி பேர் வைச்சதுக்கே நம்ம ஊர்ல பர்ஸ்ட் லுக் வந்த உடனே ஒரு குரூப் தையதக்கனு ஆடி புரோமோசன் பண்ணியே பார்க்கனும்னு நினைக்க வச்சிருவாங்க. ஓபனிங் சீன்லயே சில்லரைய சிதரவிட்டுட்டு இருப்போம் அப்போ ஹீரோ கார்ல் இருந்து இறங்கி போதை தெளிஞ்ச அப்றமும் போலீஸ் கிட்ட தவலாத்தா நிப்பாரு, என்னா சார் இந்நேரத்துல போலீஸ் கேட்க நம்ம ஆளு பொண்டாட்டி தொல்லனு ஆரம்பிக்க பதிலுக்கு அவரும் ஆமோதிக்க நாலு மொக்கைய போட்டு சிரிங்கடானு சிம்பாளிக்கா அவரே சிரிச்சு காட்டுவாரு... அப்போ சின்சியர் சிகாமணி வந்து ஜீப்ல ஏத்துறதுக்கு நம்ம ஹீரோ கைய புடிக்க, கூலிங் கிளாஸ் போட்டு ஒரு பார்வை பார்ப்பாரு விசில் பறக்கும்... ஸ்டேசனுக்கு போய் வான்ட்டடா எல்லா பி.சிக்கும் வணக்கத்த போட்டுட்டு டி.ஜி.பி ட்ட நா பேசனும் போன் கிடைக்குமானு கேட்டு பயமுறுத்துவாறு... உடனே எஸ்.ஐ ஹீரோ அல்லகைக்கு பொச்சுலயே ஒன்னு சாத்த நம்ம ஆளு வெகுண்டெழுந்து நான் மிலிட்டரி, ஏன் அப்பா யாருனு தெரியுமா, ஏன் ரேஞ்ச தெரியுமானு சென்சஸ் ஆபீசர்ட்ட சொல்ற மாதிரி புட்டு புட்டு வைப்பாரு. அப்றம் எஸ்.ஐ டென்சனாகி ஜட்டியோட உக்கார வைப்பாரு ஹீரோ அல்லக்கைய, நம்ம ஆளு பக்கத்துல இருக்கிற அக்யூஸ்ட்டுட்ட விசாரிச்சு அசிங்கப்படுத்தராரம் லெவல்ல அவரு அசிங்கப்பட்டுட்டு தூங்கிருவாரு... காலைல விசயமே தெரியாத இன்னொரு அல்லக்கை வந்து பைன கட்டிட்டு கூப்டு போவாரு. அப்ப எஸ்.ஐ வார்ன் பண்ணிவிட வில்லனே அவர்தானு ஹீரோக்கு தெரியவரும். ப்ரண்டு கிட்ட பஞ்ச் பேசிட்டே போயி அசிங்கப்படுத்துன அவர பழிவாங்க பதுங்குவோம்னு டி.ஆர் ஸ்டைல்ல சொல்லிட்டு சரக்கு அடிக்க கிளம்பவாரு... ( ஒரு குத்து சாங்... ) அடுத்த கொஞ்ச நாள்ல இன்னொரு பிரச்சனைல சிக்க குருசேத்திர போர் ஆரம்பிக்கிதுனு இண்டர்வெல் விடுவாங்க.. பாப்கார்ன வாயில மென்னுட்டு இருப்போம் ஹீரோ அப்பாக்கு விசயம் தெரிஞ்சு ஆளுங்கல கூட்டிட்டு ஸ்டேசனுக்கு வர அங்க எஸ்.ஐ, மளிகை சாமான் வாங்கி குடுக்க வீட்டுக்கு போய்ருப்பாரு கூட்டத்த பார்த்து ஊர்காரங்கலாம் ஆமாம் போர்ங்கற லெவல்ல வேகமாக வர பின்னாடியே வில்லனும் வந்து கூட்டத்துல பஞ்ச் பேசுவாரு உடம்பெல்லாம் நமக்கு சிளித்து போய்ரும். ஹீரோ நைனா நொந்து போய் சாதிக்காரன், புளுத்தினு சில்ற வேலைய பார்பாப்ல ஏதும் வொர்க் அவுட் ஆகாம கிளைமேக்ஸ் வந்துரும். ஒரு பைட் சீன் வச்சே ஆகனும்னு வாடா வாடானுட்டு ஒரு காட்டுக்குள்ள (அ) ஆளே இல்லாத இடத்துல சண்டை போடுவாங்க ஏற்கனவே வில்லனோட நடந்த சண்டைல மாட்டிக்க இந்த தடவையும் அதே மாதிரி நடக்கும். சீட் நுனில வந்து உட்கார சட்டுனு ஹீரோ பேண்ட பாக்கெட்டோ, முதுகுலயோ இருந்து வெபன் எடுத்து நெத்தி போட்டுல வைப்பாரு பாருங்க வேர்வை வந்துரும் நமக்கு. அப்றம் என்ன ஹீரோ நாலு மசாலா போட்ட சோசியலுசத்த பேச வில்லன் மனசு மாறனு மாதிரி முறைச்சு பார்ப்பாரு ஹீரோ பறந்து பறந்து அடிச்சதுலயும், சேறுல புரண்டுதலயும் ஆகாசமா இருப்பாரு அல்லக்கை ப்ரண்டுகளாம் கூப்டு போயிருவாங்க....! அவ்ளோதான் நாமலாம. பேக் அப் பண்ணிட்டு கிளம்ப வேண்டியதான்.
என்னடா ஆரம்பத்துல நல்லா போச்சு, அப்றம் டிராக் மாறிருச்சு, இடைல இடைல வந்த கேரக்டர்லாம் ஒன்னுமே காணோம், ஹீரோவ மட்டுமே காமிச்சிருக்காங்கனு நீங்க கேட்கலாம். ஏன்னா இது தமிழ் ரீமேக் மக்களே!...பச்
-கடிதாசி தொடரும்
ஆஹா.....
ReplyDelete🤗👍
Delete