"கொரோனா தாக்கம் குறைகிறதா...! இந்தியாவில்"?
நாட்டில் மார்ச் 22-ந்தேதி 'ஜனதா கர்ஃபீவ்'வில் தொடங்கிய 'கொரோனா' அச்சம் படிப்படியாக 144 தடை, ஊரடங்கு உத்தரவு என்று மக்களின் பீபியை எகிற வைத்தது. 21 நாள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம், ரயில், பஸ், விமான போக்குவரத்து என ஓவர்நைட்டிலே நோயை ஒடுக்கும் வேலைகளை முடுக்கிவிட்டது மத்திய அரசு. ஆனால் இதுக்கெல்லாம் அறியாத மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றபோது போலீசார் லத்தியால் கொடுத்தனுப்ப மக்கள் மொத்தமாகவே முடங்கிபோயினர். மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஓரிரு நாட்கள் பிடிபட்டது. நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரிக்க அரசு செய்வதறியாது திகைத்த வேளையில், டெல்லி காசியாபாத்தில் திரண்டது மக்கள் கூட்டம். உடனே உள்துறை அமைச்சகம், ஊரடங்கை மீறுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள், கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கும் தடாலடியாக அறிவித்தது. சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தவித்த வடமாநில மக்கள் நடைபயணமாக சென்றனர். வழியிலேயேே பசியால் வாடி 5 வயது சிறுவன் உயிரிழந்தது, வீட்டிற்கு சென்றடைந்த தொழிலாளி உயரிழந்தது என அடுத்தடுத்து நடந்தது அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி உண்டானது. பின்னர் வானொலியில் இந்த இக்கட்டான நிலைமையல் மக்களை தள்ளியதற்காக மன்னிப்பு கோருகிறேன். அனைவரும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று அனுதாபத்தை தெரிவித்தார் மோடி. இப்படியாக இறுக்கமான சூழலிலே இருந்த நிலையில் வழிப்போக்காக சென்ற கூலித் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினியை தெளித்து இரக்கமற்ற முறையில் நடந்து கொண்டது உ.பி. காவல்துறையும், சுகாதாரத்துறையும். இந்த சமயத்தில் நோயின் தொற்றும் ஆயிரத்தை தொட பலியின் எண்ணக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போனது. பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தும் வரும் வேளையில், வெண்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஒரு மாதத்திற்கு முன் சீனாவிற்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா தற்போது அதே சீனாவிடம் வெண்டிலேட்டர்களை இறக்குமதி செய்ய முடிவு செய்து இருக்கிறது. அதோடு இல்லாமல் தனியா வாகன தொழிற்சாலைகளிடம் செயற்கை சுவாச கருவிகளை (வெண்டிலேட்டர்) போர்க்கால அடிப்படையில் தயாரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளது. மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்த கொரோனா பற்றிய தாக்கம் தற்போது குறைந்து உள்ளதாகவே தெரிகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமை, நடப்பு உண்மை விவரங்கள் மக்கள் மத்தயில் சேராததும் முக்கிய காரணங்களாக உள்ளன. 21 நாள் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டதற்கு அப்படியொரு எண்ணம் இல்லை என்று மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆனால் நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்துகொண்டே போவது இதனை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முடங்கி, தற்போது அரசு அதிகாரிகளே அதிகளவில் தலைகாட்டி வருகன்றனர். இதுவும் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.எப்போது ஊரடங்கு நிறைவடையும், நோயின் தாக்கம் அடியோடு ஒழியுமா, அல்ல இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்குமா? என்று மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.
Comments
Post a Comment