"5G-சேவையினால் உருவானதா கொரோனா?"

உலகில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் பாதிப்பு ஏறுமுகமாகவே இருந்து வருகின்றது. சர்வதேச பொருளாதாரத்தில் கடும் சரிவையும், உலகம் முழுவதும் மக்களின் வாழ்வாதாரத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய பேரழிவை உண்டாக்கிய வைரஸ் எப்படி உருவானது என்பது இன்றளவிலும் புதிராகவே இருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டு சீனாவில் பரப்பப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இதை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அதனை 'சைனீஸ் வைரஸ்' என்று வெளிப்படையாகவே பேசிவந்தார். மேலும் இதுகுறித்து பல்வேறு கட்டுக்கதைகளும் வதந்திகளும் உலகம் முழுக்க உலாவி வந்தன. இந்த நிலையில் 5G- நெட்வொர்க் சேவையினால்தான் கொரோனா வைரஸ் உருவானது என்று சமூக வலைத்தளங்களில் இங்கிலாந்து மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இது பெரும் சர்ச்சையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.ஏற்கனவே பிரதமர் போரிஸ் ஜான்சன், இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு, அந்நாட்டில் அதிகரிக்கும் உயிரிழப்புகளாலும் உறைந்து போய் உள்ளது. பிரிட்டனில் பல்வேறு தரப்பு மக்கள் 5G-சேவையினால்தான்  'பேன்டமிக்' வைரஸ் உருவாகி உள்ளது எனவும், அதனால் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஹெலிகாப்டர்களின் மூலம் கிருமநாசினி தெளிப்பதாகவும் கடுமையாக சாடி வருகின்றனர். சமீபத்தில்தான் பிரிட்டன் நாட்டின் நெட்வொர்க் நிறுவனங்கள் 5G-சேவைக்கான சோதனை ஓட்டத்தைச் செய்தனர். அங்கு இதுவரை 10 நகரங்களின், 13 பகுதிகளில் இதற்கான சோதனை ஓட்டம் செய்யப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் சீனாவின் உகான் நகரத்தல் 5G-சேவை தொடங்கப்பட்ட நிலையில்தான் வைரஸ் பரவத் தொடங்கியது என கூறுகின்றனர். மேலும் இது அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகள், சீனாவிற்கு எதிராக தொடுத்துள்ள 'பயோ-வார்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். உதாரணமாக 5G-சேவை வசதிகள் இல்லாத ஆப்பிரிக்கா, கரீபியன் நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் அவ்வளவாக இல்லை என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். "5G-சேவையினால் ஏற்படும் அதிர்வெண்கள் ஆண்மைக்குறைவு, தூக்கமின்மை மற்றும் கேன்சர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சில வருடங்களாகவே பலர் எதிர்ப்புக்குரல் எழுப்பி வந்துள்ளனர்". இந்த நிலையில்தான் 5G-நெட்வொர்க்கினால் உருவான கொரோனா வைரஸ் மக்கள்தொகையை குறைப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி என்ற 'வதந்தீ''யை பற்ற வைத்துள்ளனர். 

     5G-சேவை என்பது அடுத்த தலைமுறைக்கான புதியதொரு அத்தியாயமாகவும், இணைய வளர்சியாகவும் பார்க்கப்படுகின்றது. உலகின் பல நாடுகளும் இதற்காக தயாராகி வரும்நிலையில், சீனாவில் 5G நெட்வொர்க் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் தற்போது 5G-சேவை தொடங்கப்பட்டு உள்ளன. வெறுமனே விரைவான இணைய பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மருத்துவம், கல்வி, சமூக சார்ந்த துறைகளிலும் உபயோகிக்கும் வகையில் 5G நெட்வொர்க் உருவாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மருத்துவம் பயிலும் மாணவர்கள் மகப்பேறு ஆராய்ச்சியை விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலம் நேரடியாகவே கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது. மேலும் பிரட்டனின் தனியார் நிறுவனம் ஒன்று 'ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்' திட்டத்தை 5G- சேவையின் மூலம் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அவசர சிகிச்சை பெறுபவர்களுடன், மருத்துவ ஊழியர்களை இணைக்கும் திட்டமாக 5G-நெட்வொர்க் சேவையை சோதனை செய்து வருகிறது. இப்படி போக்குவரத்து, மக்கள் நலன் என்று பல நவீனப்புரட்சியை ஏற்படுத்தவிருக்கும் 5G-சேவையை பற்றிதான் பல குற்றசாட்டுகளும், திட்டமிட்ட பொய் செய்திகளும் பரப்பபடுகின்றன. இது தொடர்பான புகார்களுக்கு உலக சுகாதார நிறுவனமும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தனியார் வானொலி நிறுவனம் தரப்பில் கூறுகையில், உலகின் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் மக்களிடையே விழிப்புணர்வையும், உடனுக்குடனான உண்மை தகவல்களை தெரிவித்து வருகின்றோம். ஆனால் சிலர் "வானொலி , தொலைக்காட்சிகளின் அலைவரிசை மூலமாக வைரஸ் பரவுகின்றது என அப்பட்டமான பொய்யை பரப்பி வருகின்றனர். இதை பரப்புவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்து உள்ளனர். உலக சுகாதார நிறுவனமும், மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த தொழில்நுடபங்களை அனுமதிக்கமாட்டோம் எனவும், 5G-நெட்வொர்க் சேவையினால் பாதிப்பு ஏற்படுகின்றது என அறிவியல் பூர்வமாக இதுவரைை நிரூபிக்க படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. 
                      - கடிதாசி தொடரும்

Comments