தோழர் லெனின் தொடங்கி தசரத் தேவ் வரை..
இந்தியாவில் இடதுசாரிகள் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் ஒன்று திரிபுரா. வளர்ச்சியல்லாத பின்தங்கிய நிலையில் இருந்த பழங்குடியின மக்கள் கணிசமானோர் வசிக்கும் மாநிலமான திரிபுரா இந்தியாவிலேயே நலன் மேம்பாடு தனிநபர் வருமானம், கல்வியறிவு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் முன்னுதாரணமாக உயர்ந்து நிற்கிறது. இந்தியா 1947-ல் சுதந்திரம் அடைந்தாலும் மன்னாராட்சியின் கீழ் இருந்த திரிபுரா பகுதி 1949-ல் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. கந்துவட்டி கொடுமைகளை எதிர்த்தும் , பழங்குடியின மக்களின் நில உரிமைகளுக்காகவும் மக்கள் விடுதலை குழு என்ற அமைப்பை ஆரம்பித்து கம்யூனிஸ்ட்டுகள் போராடி வந்தனர். திரிபுரா 1972-ம் ஆண்டு மாநில அந்தஸ்து பெற்றது. பழங்குடியின மக்களின் நலன்களுக்காகவும், குத்தகை விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் போராடி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1978-ல் ஆட்சியை பிடித்து தோழர் நிருபன் சக்ரபர்த்தி முதல்வரானார். ஆட்சி பொறுப்பேற்றதும் நிலசீர்திருத்த சட்டங்களை அமல்படுத்தி குத்தகை விவசாயிகள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தியும், பழங்குடியின மக்களிடம் ...